Saturday, August 20, 2011

குளிகன் என்ற மாந்தி பலன்கள் ஜோதிடக்குறிப்பு


      ஜெனன ஜாதகத்தில் குளிகன் என்ற மாந்தி இருக்கும் இடத்தை பொறுத்து பலன்கள்.........
      லக்கினத்தில் மாந்தி இருந்தால் குண்டான உடல‌மைப்பு, உடல் உபாதைகளும், மறைமுக நோய்களும், அடக்கம் மற்றும் வெட்கம் இல்லாதவராகவும், மனக்கவலை அதிகம் கொண்டவராகவும், குறும்புத்தனம் கொண்டவராகவும், சுறுசுறுப்பானவராகவும் இருப்பார்கள். சுபகிரக சேர்க்கை மற்ரும் பார்வை இருந்தால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
      2ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் குடும்ப வாழ்க்கை நிம்மதி இல்லாதவராகவும், பேச்சில் தடுமாற்றமும், கீழ்த்தரமான புத்தி கொண்டவராகவும், வீண் பொருள் விரயம் செய்பவராகவும், கண்களில் நோய், தீய பழக்கம் கொண்டவராகவும் இருப்பர்.
      3ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு, தைரியம், துணிவு, பலரை வழிநடத்தும் திறன், புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளை குவிக்கும் சூழ்நிலை ஆகியவை உண்டாகும்.
      4ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நிம்மதியற்ற நிலை, உடல் நிலை பாதிப்பு, வீட்டு மனை சேர்க்கை உண்டாகத் தடை, தாயாருடன் சுமூக நிலை இல்லாமை ஆகியவை ஏற்ப்படும்.
      5ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மனநிலை பாதிப்பு, புத்திர தோஷம் பாதிப்பு, குறைந்த வயதில் கண்டம், செல்லவம் செல்வாக்கை இழக்கும் நிலை, கடவுள் நம்பிக்கை இல்லாத்வராகவும், சுய இன்பப்பழக்கம் அல்லது முறையற்ற உறவு கொண்டவராகவும் இருப்பார்கள்.
      6ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நீண்ட ஆயுள், பிற‌ருக்கு உதவி செய்யும் மனோபாவம், ஆரோக்கியமான வாழ்வு, எதிர்கள் இல்லாத நிலை அல்லது எதிரிகளிடம் எப்போதும் வெற்றி, வாழ்வில் படிப்படியான உயர்வு பெறுவார்கள்.
      7ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடல், இல்லற வாழ்வில் நிம்மதியற்ற நிலை, குறைவான நட்பு, மனைவியின் சொத்தை அழிக்கும் நிலை, நம்பியவர்களால் ஏமாற்றப்படுதல் ஆகியன ஏற்படும்.
      8ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் அதிக பசி கொண்டவராகவும், மறைமுக நோய் கொண்டவராகவும், அதிக கவலை கொண்டவராகவும், எதிலும் தோல்வியே ஏற்ப்படும் நிலையும், வீண் விரயம் செய்பவராகவும் இருப்பர்.
      9ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடலமைப்பு கொண்டவராகவும், தந்தைக்கு தோஷம் உடையவராகவும், தவறான பாதைக்கு செல்பவராகவும், அதனால் தவறான பழக்கவழக்கங்களும்,முறையற்ற பாலுணர்வு உடையவராகவும், எப்பொழுதும் சோதனை உடையவராகவும், பணக்கஷ்டம் உடையவராகவும் இருப்பர்.
      10ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் சுயநலம் மிக்கவராகவும், மற்றவர்களைப் பற்றி கவலை இல்லாதவர்களாகவும், நன்றாக உழைக்கக்கூடியவராகவும், வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்ப்படும்.
      11ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் செல்வம், செல்வக்குடன், நல்ல மனைவி, மிகுந்த புகழ், நெருங்கியவர்களுக்கு உதவி புரியும் தன்மை, தெய்வ நம்பிக்கை கொண்டவராகவும், குறுகிய கால்களை கொண்டவராகவும் இருப்பர்.
      12ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் வீண் விரயம் செய்பவராகவும், இழிவான செயல்களை செய்பவராகவும், உடலில் குறையுடன், குறைவான சந்தோசம் கொண்டவராகவும், குடும்பவாழ்வில் சோகம், சோதனை கொண்டவராகவும், சோம்பல்த்தனம் கொண்டவராகவும் இருப்பர்.
       இது மாந்தியின் அமைப்பை பொறுத்து பொதுவான பலன்களே, மற்றபடி மற்ற கிரகங்களின் பார்வை சேர்க்கை பொறுத்து பலன்கள் வேறுபடலாம். ஆனால் இந்த பலன்கள் பெரும்பாலானோருக்கு பொருந்தும்.

8 comments:

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்கு நன்றி.

ELIYAVAN said...

மாந்தியாவது வாந்தியாவது.

arul said...

what is the english name for maanthi?

selva said...

i read this, then i happy. your service are use to people. vazhga valamudan thiyagu from coimbatore.

Anonymous said...

100% true buddies!

Unknown said...

பேஸ் ஐயா..

Unknown said...

பேஸ் ஐயா..

Unknown said...

உங்களின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன் மிகவும் சிறப்பு...

Post a Comment