ஆண்களின் ஜாதகத்தில் 7ம் இடத்ததிபன் மிதுனம்/கன்னியில் கெட்டு நிற்க அல்லது 7 அதிபன் புதனாக இருந்து பகை நீசம் பெற்றோ அல்லது பாவிகளுடன் இனைந்தோ கெட்டு நின்றால்,
அவர்களுக்கு வாய்த்த மனைவி வாயாடிகளாகவும், வெட்டிப் பேச்சு பேசுபவர்களாகவும், கணவன் ஒன்றுக்கும் உதவாதவன் என்று சொல்லிக்கொண்டு கணவனை வார்த்தைகளால் வறுத்து எடுத்துக்கொண்டு உட்கார்ந்து தின்று கொண்டு இருக்கிறவர்களாகவும்.
எனக்கு வீட்டு வேலையே சரியாக இருக்கிறது, நான் ஏன் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாகவும். அந்த வீட்டு வேலையையும் சரிவர செய்யாமல் பேச்சு செயல் அனைத்திலும் பதட்டம் கொண்டு செயல் படுபவர்களாகவும் இருக்கின்றனர். எனக்கு சந்தோசம் இல்லை நீயும் சந்தோசமாக இருக்ககூடாது என்று செயல்படுபவர்களாக இருக்கின்றனர்.
இவர்கள் முழுக்க முழுக்க கணவனை குறைகூறிக்கொண்டு இருந்தாலும், இவர்களை சமூகம் மற்றும் குழந்தைகள் நலன் கருதி இந்த ஜாதகர்கள் சகித்துக் கொண்டு வாழ்பவர்களாக இருப்பதைப்பார்க்க முடிகிறது. இந்த ஜாதகர்களின் வாழ்க்கை தாமரை இலை தண்ணிர் போல் அமையும் வாழ்க்கை என்று குறிப்பிடலாம் அல்லவா?
1 comment:
வணக்கம்.எனது சகோதரர் மூலம் தங்கள் வலைதளம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
Post a Comment