மோட்சத்தை குறிப்பவர் கேது, அவர் காலபுருஷ அஷ்டம ஸ்தானம் (விருச்சிக ராசி) என்றழைக்கப்படும் ஆயுள் ஸ்தானத்தில் உச்சமடையாமல் எப்படி மற்ற வீடுகளில் உச்ச நிலையை பெறுவார், ஒருவர் மோட்சமடைந்தாலும், அடையாவிட்டாலும் அந்த நபர் இறப்பை சந்தித்தே ஆகவேண்டும், ஆக இறப்பு நிகழும் இடமான அஷ்டமத்தில் கேது உச்சமடைவது தானே சரியானது, ஏனெனில் அங்கே தானே ஒருவர் மோட்சமடைய வேண்டுமா, அல்லது மறுபிறப்பு எடுக்க வேண்டுமா என்பதை கேது முடிவு செய்ய இயலும்..?!
உலகியல் இன்பங்களை அள்ளி கொடுப்பவர் ராகு, அவர் காலபுருஷ 2ம் வீடும் (ரிஷபம்) குடும்ப, வருமான ஸ்தானத்தில் உச்சமடையாமல் வேறெங்கு உச்சநிலை பெறுவது பொருத்தமாக இருக்கும்?!, ஒருவருக்கு அமையும் குடும்பம் மற்றும் வருமானமும் தானே உலகியல் இன்பங்களை பெற வழிவகுக்கிறது குடும்பம் இல்லாமல் யாரும் பிறக்க முடியாது, வருமானம் இல்லாமல் சுகங்களை அனுபவிக்க முடியாது அப்படி பார்க்கும் போது ரிஷபத்தில் ராகு உச்சமடைவது தானே சரியான அமைப்பாக இருக்கும்?!..!
இங்கே நீச்சநிலையை எடுத்துக்கொண்டோம் என்றால், ஆசையுள்ளவனுக்கு இறப்பு சீக்கிரம் வராது, என்பதற்கு ஏற்ப விருச்சிகத்தில் ராகு நீச்சம், ஏனெனில் ஆசை துறக்கும் போதே இறப்பு நிகழும், அதே போலத்தான் உலகியல் வாழ்க்கையை அனுபவிக்கும் போது இன்பங்களை எங்கிருந்து துறக்க முடியும், ஆக ராகு ரிஷபத்திலும் கேது விருச்சிகத்திலும் உச்சம் என்பதே சரியான அமைப்பாகும், இது எனது அனுபவத்திலும் சரியாகவே உள்ளது..!