Sunday, October 5, 2014

தன்முனைப்பு(ஈகோ) ஜோதிடக்குறிப்பு

      ல‌க்கினாதிபதி வலிமை பெறுவது நல்லது தான் என்றாலும் உச்ச வலிமை பெற்று விட்டால் ஜாதகருக்கு தன் முனைப்பு(ஈகோ) ஏற்பட்டு விடுகிறது. அப்படிபட்ட ஜாதகர் சரியோ தவறோ தான் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று எண்ணுவர். இதனால் வீட்டிலும், சமுகத்தில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது.

Friday, October 3, 2014

சுக்கிரன் ஒருபார்வை ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் சுக்கிரனும் சந்திரனுக்கு 4ம் இடத்தோனும் சேர்ந்து எந்த வீட்டில் இருந்தாலும் அல்லது ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொண்டாலும் ஜாதகருக்கு ஆன்மீக நாட்டம் ஏற்ப்படும். ஜாதகர் ஆன்மீகத்தில், ஞானமர்கத்தில், சாதனை செய்ய வேண்டும் என்று நினைப்பர். சித்த புருஷர்களாக இருப்பர்.
      சுக்கிரன் லக்கினத்திற்கு 2ம் இடத்திலாவது, 11 ம் இடத்திலாவது இருப்பது சிறப்பானதாகும். வீடு, வாகன வசதிகளை ஏற்ப்படுத்தும்.
      சுக்கிரன் 4ம் இடத்திலோ அல்லது 4ம் இடத்துக் காரனுடன் சேர்ந்து வலுத்துக் காணப்பட்டாலோ வீடு, வாகன யோகம், நல்ல புகழ் ஏற்படும்.
சுக்கிரனுடன் 2ம் இடத்ததிபதி மற்றும் 7ம் இடத்ததிபதி சம்பந்தம் ஏற்பட்டு வலுத்துக்காணப்பட்டால் நல்ல, குணமான, தீர்க்க ஆயுளுடன் கூடிய மனைவி வாய்ப்பாள்.
      சுக்கிரன் 12ம் இடத்துடன் சம்பந்தம் ஏற்பட்டு வலுத்தால் நல்ல சயன சுகம் ஏற்படும்.
      சுக்கிரனுக்கு 10ம் இடத்துடன் அல்லது 10க்கதிபதியுடன் சம்பந்தம் ஏற்பட்டு வலுத்தால் கலைத்துறையின் மூலம் ஜீவனம் ஏற்படும்.
      லக்கினத்தில் சுக்கிரன் இருந்தால், நல்ல புகழ், நல்ல மனைவி, வீடு, வாகனம் எல்லாம் ஏற்படும்.
      சுக்கிரன் 5ல் இருந்தால் பாக்கியசாலி, மனைவி சொல்லைத்தட்டாதவர்.
      சுக்கிரனுடன் சனி சேர்ந்தால் தொழில்த்துறை படிப்பு ஏற்படும், பற்றற்ற வாழ்வை விரும்புபவர்களாக இருப்பர்.
      சந்திரனுக்கு 4 அல்லது 10ல் சுக்கிரன் இருந்தால் நிலம், வீடு, வாகனம் அமையும்.
      சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கை எழுத்தார்வம் ஏற்படும், எழுத்தாளர்களாக இருப்பர்.
      சுக்கிரன் செவ்வாய்க்கு 4 அல்லது 7ல் இருந்தால் நிலம், வாகனம், வீடு அமையும்.
      சுக்கிரன் 7ல் தனித்து இருந்தால் திருமணம் தடை. ஆனால் சுக்கிரனும் அவர் நின்ற வீட்டுக்குடையவரும் சஷ்டாஷ்டகம் ஆனால் திருமணம் நடைபெறும்.
      சுக்கிரன் சந்திரனுடன் இனைந்து எந்த‌ இடத்தில் நின்றாலும் திருமணம் தடை. ஆனால் அதுவே  கடகம், ரிஷ‌பம், துலாத்தில் இருந்தாலும், 6, 8, 12ல் இருந்தாலும், அம்சத்தில் இருவரும் சஷ்டாஷ்டகம் பெற்றால் திருமணம் நடைபெறும்.
      துலா லக்கினத்திற்க்கு சுக்கிரன் ஆட்சி பெற்ற சனியுடன் கூடி 4ம் இடத்தில் இருந்தால் பொது ஜனத்தொடர்பு ஏற்படும். புகழ் பெறுவார்கள்.

சுக்கிரனும் சித்த புருஷர்களும் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் சுக்கிரனும் சந்திரனுக்கு 4ம் இடத்தோனும் சேர்ந்து எந்த வீட்டில் இருந்தாலும் அல்லது ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொண்டாலும் ஜாதகருக்கு ஆன்மீக நாட்டம் ஏற்ப்படும். ஜாதகர் ஆன்மீகத்தில், ஞானமர்கத்தில், சாதனை செய்ய வேண்டும் என்று நினைப்பர். சித்த புருஷர்களாக இருப்பர்.

Monday, August 4, 2014

சிராக யோகம் ஜோதிடக்குறிப்பு

சிராக யோகம் என்றால் என்ன?
புதனும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் கேந்திரம் பெறுவதோடு, வியாழனும் அவ்விரு கிரகங்களுக்கும் கேந்திரம் பெற்று நின்றால் அது சிராக யோகம் எனப்படும். இது ஒரு அரிய யோகம் எப்போதாவது ஏற்ப்படுவது. இதன் பலன்கள்...
1. உயர் கல்வி உண்டாகும்
2. நல்ல செல்வம் உண்டாகும்
3. வாகனம் முதலான வசதிகள் உண்டாகும்
4. அசையா சொத்துக்கள் சேரும்
5. நல்ல மனைவி, புத்திரர்கள் ஏற்ப்படுவார்கள்
6. கெளரவமான உயர்பதவி, தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்
அதாவது சிறப்பான ராஜ யோக பலன்களை இந்த யோகம் தரும்
சிராக யோகம் குறித்து நாபச யோகங்கள் குறித்த விளக்கங்களில் பராசுரர் எடுத்துக்கூறியுள்ளார். மால யோகம் எனவும் இந்த யோகம் அழைக்கப்படுகிறது.