1. நல்ல மருத்துவர்கள் அன்னை தெரசா போன்று சேவை மனப்பான்மையுடன் புண்ணியம் சேர்ப்பவர்கள்.
2. கோயிலில் நல்ல விதமாக பூஜை செய்து பக்தகோடிகளின் மனம்குளிரச் செய்யும் அர்ச்சகர்கள்.
3. நலிந்தோருக்கு முடிந்த உதவிகளைச் செய்பவர்கள்.
4. இலவசமாக நல்ல அலோசனைகளை வழங்குபவர்கள்.
5. அனாதை இல்லங்கள், மடங்கள், கோயில்களில் முழு ஈடுபாட்டுடன் உடல் உழைப்பில் ஈடுபட்டு புண்ணியம் தேடுபவர்கள்.
6. மாணவர்களுக்கு உண்மையான ஈடுபாட்டுடன் கல்வி கற்ப்பிப்பவர்கள்.
7. தனது வருமாணத்திற்க்கு உட்பட்டு அதில் சில வகைகளில் புண்ணியம் தேடுபவர்கள்.
8. குழந்தைகளின் கல்வி, அனாதைக்குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பவர் மற்றும் பலர் இந்த வரிசையில் சேர்க்கலாம் அல்லவா. அவர்களுக்கான ஜாதகம் எவ்வாறு அமைந்திருக்கும் என்று ஒரு சிறு அலசல்.
1) ஜாதகத்தில் குருமங்கள யோகம் அமைந்திருந்தால் ஜாதகர் தனது சக்திக்கு உட்பட்டு ஏதேனும் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டேஇருப்பார்.
2) ஜாதகத்தில் சூரியன் சந்திரன் இனைந்திருந்தால் அவர்கள் இவ்வுலகை விட்டு விலகும் வரை ஏதேனும் புண்னிய காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்.
3) 5,9 ஆகிய திரிகோண ஸ்தனங்களில் சுபர் அமர்ந்திருந்தால் பொதுநலத் தொண்டுகள் செய்து புண்ணியம் தேடிக்கொள்வர் எப்பொழுதும்.
4) சுபாவ பாவிகள் லக்கினாதிபதியாக அமைந்து திரிகோணம் ஏறினாலும் புண்ணியவானாக இருப்பர்.
5) ஜாதகத்தில் புதஆதித்ய யோகம் அமையப்பெற்றவர்கள் புண்ணியம் தரும் காரியங்களில் ஈடுபடுவர்.
6) குரு சூரியன் இனைப்பு பலனே கருதாது பொது காரியங்களில் ஈடுபட்டு புண்ணியம் சேர்க்க உதவும்.
7) புதன் கேது லாபத்தில்(11ம் இடம்) இனைந்தால் தெய்வ காரியங்களுக்கு உதவுவதால் புண்ணியம் கூடும்.
8) கேந்திர ஸ்தானங்களில் புதன், சூரியன், சுக்கிரன் இருக்கும் அமைப்பு தெய்வ காரியங்களில் ஈடுபட்டு புண்ணியம் சேர்க்க உதவும்.
9) குருசந்திர யோகம், கஜகேசரியோகம், கிரகமாலிகா யோகம் ஆகியவை பொதுகாரியம், தெய்வத்தொண்டு ஆகியவற்றை தனது செல்வம் செல்வாக்கால் நிறைவேற உதவும்.
10) 5,9,10 க்கு உடையவர்கள் ஒரே வீட்டில் இனைந்து நின்றால் பொதுஇ சேவைகளில் ஈடுபட்டு புண்ணியம் சேர்க்க உதவும் அமைப்பு.
11) குரு, சுக்கிரன், சந்திரன் ஜாதகத்தில் நல்ல விதமாக சம்பந்தம், இனைப்பு ஏற்ப்பட்டால் தெய்வ காரியம், பொது நலத்தொண்டு வாயிலாக புண்ணியம் சேர்க்க முடியும்.