Sunday, August 28, 2011

மாகா புண்ணியவான்கள் யார்? ஜோதிடக்குறிப்பு


      1. நல்ல மருத்துவர்கள் அன்னை தெரசா போன்று சேவை மனப்பான்மையுடன் புண்ணியம் சேர்ப்பவர்கள்.
      2. கோயிலில் நல்ல விதமாக பூஜை செய்து பக்தகோடிகளின் மனம்குளிரச் செய்யும் அர்ச்சகர்கள்.
      3. நலிந்தோருக்கு முடிந்த உதவிகளைச் செய்பவர்கள்.
      4. இலவசமாக நல்ல அலோசனைகளை வழங்குபவர்கள்.
      5. அனாதை இல்லங்கள், மடங்கள், கோயில்களில் முழு ஈடுபாட்டுடன் உடல் உழைப்பில் ஈடுபட்டு புண்ணியம் தேடுபவர்கள்.
      6. மாணவர்களுக்கு உண்மையான ஈடுபாட்டுடன் கல்வி கற்ப்பிப்பவர்கள்.
      7. தனது வருமாணத்திற்க்கு உட்பட்டு அதில் சில வகைகளில் புண்ணியம் தேடுபவர்கள்.
      8. குழந்தைகளின் கல்வி, அனாதைக்குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பவர் மற்றும் பலர் இந்த வரிசையில் சேர்க்கலாம் அல்லவா. அவர்களுக்கான ஜாதகம் எவ்வாறு அமைந்திருக்கும் என்று ஒரு சிறு அலசல்.

1) ஜாதகத்தில் குருமங்கள யோகம் அமைந்திருந்தால் ஜாதகர் தனது சக்திக்கு உட்பட்டு ஏதேனும் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டேஇருப்பார்.
2) ஜாதகத்தில் சூரியன் சந்திரன் இனைந்திருந்தால் அவர்கள் இவ்வுலகை விட்டு விலகும் வரை ஏதேனும் புண்னிய காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்.
3) 5,9 ஆகிய திரிகோண ஸ்தனங்களில் சுபர் அமர்ந்திருந்தால் பொதுநலத் தொண்டுகள் செய்து புண்ணியம் தேடிக்கொள்வர் எப்பொழுதும்.
4) சுபாவ பாவிகள் லக்கினாதிபதியாக அமைந்து திரிகோணம் ஏறினாலும் புண்ணியவானாக இருப்பர்.
5) ஜாதகத்தில் புதஆதித்ய யோகம் அமையப்பெற்றவர்கள் புண்ணியம் தரும் காரியங்களில் ஈடுபடுவர்.
6) குரு சூரியன் இனைப்பு பலனே கருதாது பொது காரியங்களில் ஈடுபட்டு புண்ணியம் சேர்க்க உதவும்.
7) புதன் கேது லாபத்தில்(11ம் இடம்) இனைந்தால் தெய்வ காரியங்களுக்கு உத‌வுவதால் புண்ணியம் கூடும்.
8) கேந்திர ஸ்தானங்களில் புதன், சூரியன், சுக்கிரன் இருக்கும் அமைப்பு தெய்வ காரியங்களில் ஈடுபட்டு புண்ணியம் சேர்க்க உதவும்.
9) குருசந்திர யோகம், கஜகேசரியோகம், கிரகமாலிகா யோகம் ஆகியவை பொதுகாரியம், தெய்வத்தொண்டு ஆகியவற்றை தனது செல்வம் செல்வாக்கால் நிறைவேற உத‌வும்.
10) 5,9,10 க்கு உடையவர்கள் ஒரே வீட்டில் இனைந்து நின்றால் பொதுஇ சேவைகளில் ஈடுபட்டு புண்ணியம் சேர்க்க உதவும் அமைப்பு.
11) குரு, சுக்கிரன், சந்திரன் ஜாதகத்தில் நல்ல விதமாக சம்பந்தம், இனைப்பு ஏற்ப்பட்டால் தெய்வ காரியம், பொது நலத்தொண்டு வாயிலாக புண்ணியம் சேர்க்க முடியும்.

Friday, August 26, 2011

சுப-சுக விரயம் ஜோதிட‌க்குறிப்பு


      12ம் இடத்திற்குரியவர் சுக ஸ்தானமாகிய 4ம் இடத்தில் நின்றால் ஜாதகருக்கு சுகவிரயம் அதிகமாக இருக்கும்.
      அதே போல் 12ம் இடத்தில் சுபாவ சுபர்கள் நின்றாலும், 12ம் இடத்தின் உச்ச அதிபன் 12ல் நின்றாலும் ஜாதகருக்கு சுபவிரயம் அதுகமிருக்கும். குடும்பத்தில் நிறைய செலவுகள் ஏற்படும். குடும்பம், உற்றார், உறவினர் என்றால் உதவத்தான் வேண்டும். ஜாதகர் புலம்பாமல் பரந்த மனப்பான்மையுடன் செலவுகள் செய்தால் சுகப்படலாம்.

Thursday, August 25, 2011

குருசண்டாள‌ யோகம் இன்னுமொரு பார்வை ஜோதிடக்குறிப்பு


      இந்த யோகத்திற்க்கான நிலை
1) ஒரு ஜாதகத்தில் குரு ராகுவுடன் இனைந்து ராகுவினால் குருவின் தன்மை கெடும் நிலை.
2) குரு கேதுவுடன் இனைந்து கெட்ட கிரகத்தால் பார்க்கப்படும் நிலை.
3) 9ம் இடமும், குருவும் கெட்டுவிடுதல்.
4) 6ம் இடத்ததிபனுக்கும் 9ம் இடத்ததிபனுக்கும் சம்பந்தம் ஏற்ப்பட்டு, இதில் யாராவது ஒருவர் பகை நீசம் பெற்றாலும் அல்ல‌து பாவியாக இருந்தாலும், அல்லது வக்கிரம் பெற்றாலும் அவர்களுடைய சம்பந்தம் இந்த யோகத்தை ஏற்படுத்தும்.

      இந்த யோகத்தின் பலன்களை குரு, ராகுவின் தசா புத்திகளில் கண்டிப்பாக பார்க்கலாம். இந்த யோகம் வாழ்க்கை முழுதும் ஜாதகரின் வாழ்வில் இருப்பதை காணலாம், இருந்தாலும் குரு, ராகுவின் தசா புத்திகளில் மிகவும் தீவிரமாக இயங்குவதைப் பார்க்கலாம்.

      குரு சண்டாள‌ யோகம் யோகத்தின் பலன்கள்...
1) இந்த அமைபுடையவர்களின் வாழ்க்கையில் நன்றி உணர்வு என்பதே இருக்காது.
2) இந்த அமைபுடையவர்களின் வாழ்க்கையில் அவர்களாக முன்னேற மாட்டார்கள், அவர்களுக்கு யாருடைய உதவியாவது தேவைப்படும், உதவியும் சுலபமாகப் பெறுவார்கள், ஆனால் உதவி செய்தவர்களை முன்னேறிய பிறகு கைவிட்டு விடுவார்கள். தன் திறமையால் முன்னேறியதாக நினைத்துக் கொள்வார்கள்.
3) இந்த அமைபுடையவர்களின் வாழ்க்கையில் யாரையுமே உயர்வாக நினைக்க மாட்டார்கள், மாறாக அவர்கள் செய்வதே சரி என்று இருப்பர், வாழ்க்கையில் குற்றஉணர்ச்சி என்பதே இவர்களுக்கு கிடையாது.
4) அடுத்தவர்களை குறை உள்ளவர்களாகவே பார்ப்பர், குற்றம் கண்டுபிடிப்பதிலேயே குறியாக இருப்பர், எதையும் ஒருகுறுகிய எதிர்மறையான நோக்கோடவே பார்ப்பர்.  மற்றபடி கெட்டவர்கள் என்பதில்லை
5) குரு ராகுவுடன் 5ம் இடம், 9ம் இடம், 10ம் இடம் பாதிக்கப்பட்டிருந்தால் இவர்கள் நாத்திகவாதியாக இருப்பர். ஆன்மீகம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்ப்பர்.

      இந்த யோகமானதின் பலன்களை ஜாதகரின் காலத்தில் ராகுவின் தசையிலும் அதைத் தொடர்ந்து குருவின் த‌சையிலும் கண்கூடாக பார்க்கலாம்.மற்ற தசைகளில் குரு ராகுவின் புத்தி, அந்தரங்கங்களில் பார்க்கலாம்.

Saturday, August 20, 2011

குளிகன் என்ற மாந்தி பலன்கள் ஜோதிடக்குறிப்பு


      ஜெனன ஜாதகத்தில் குளிகன் என்ற மாந்தி இருக்கும் இடத்தை பொறுத்து பலன்கள்.........
      லக்கினத்தில் மாந்தி இருந்தால் குண்டான உடல‌மைப்பு, உடல் உபாதைகளும், மறைமுக நோய்களும், அடக்கம் மற்றும் வெட்கம் இல்லாதவராகவும், மனக்கவலை அதிகம் கொண்டவராகவும், குறும்புத்தனம் கொண்டவராகவும், சுறுசுறுப்பானவராகவும் இருப்பார்கள். சுபகிரக சேர்க்கை மற்ரும் பார்வை இருந்தால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
      2ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் குடும்ப வாழ்க்கை நிம்மதி இல்லாதவராகவும், பேச்சில் தடுமாற்றமும், கீழ்த்தரமான புத்தி கொண்டவராகவும், வீண் பொருள் விரயம் செய்பவராகவும், கண்களில் நோய், தீய பழக்கம் கொண்டவராகவும் இருப்பர்.
      3ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு, தைரியம், துணிவு, பலரை வழிநடத்தும் திறன், புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளை குவிக்கும் சூழ்நிலை ஆகியவை உண்டாகும்.
      4ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நிம்மதியற்ற நிலை, உடல் நிலை பாதிப்பு, வீட்டு மனை சேர்க்கை உண்டாகத் தடை, தாயாருடன் சுமூக நிலை இல்லாமை ஆகியவை ஏற்ப்படும்.
      5ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மனநிலை பாதிப்பு, புத்திர தோஷம் பாதிப்பு, குறைந்த வயதில் கண்டம், செல்லவம் செல்வாக்கை இழக்கும் நிலை, கடவுள் நம்பிக்கை இல்லாத்வராகவும், சுய இன்பப்பழக்கம் அல்லது முறையற்ற உறவு கொண்டவராகவும் இருப்பார்கள்.
      6ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நீண்ட ஆயுள், பிற‌ருக்கு உதவி செய்யும் மனோபாவம், ஆரோக்கியமான வாழ்வு, எதிர்கள் இல்லாத நிலை அல்லது எதிரிகளிடம் எப்போதும் வெற்றி, வாழ்வில் படிப்படியான உயர்வு பெறுவார்கள்.
      7ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடல், இல்லற வாழ்வில் நிம்மதியற்ற நிலை, குறைவான நட்பு, மனைவியின் சொத்தை அழிக்கும் நிலை, நம்பியவர்களால் ஏமாற்றப்படுதல் ஆகியன ஏற்படும்.
      8ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் அதிக பசி கொண்டவராகவும், மறைமுக நோய் கொண்டவராகவும், அதிக கவலை கொண்டவராகவும், எதிலும் தோல்வியே ஏற்ப்படும் நிலையும், வீண் விரயம் செய்பவராகவும் இருப்பர்.
      9ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடலமைப்பு கொண்டவராகவும், தந்தைக்கு தோஷம் உடையவராகவும், தவறான பாதைக்கு செல்பவராகவும், அதனால் தவறான பழக்கவழக்கங்களும்,முறையற்ற பாலுணர்வு உடையவராகவும், எப்பொழுதும் சோதனை உடையவராகவும், பணக்கஷ்டம் உடையவராகவும் இருப்பர்.
      10ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் சுயநலம் மிக்கவராகவும், மற்றவர்களைப் பற்றி கவலை இல்லாதவர்களாகவும், நன்றாக உழைக்கக்கூடியவராகவும், வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்ப்படும்.
      11ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் செல்வம், செல்வக்குடன், நல்ல மனைவி, மிகுந்த புகழ், நெருங்கியவர்களுக்கு உதவி புரியும் தன்மை, தெய்வ நம்பிக்கை கொண்டவராகவும், குறுகிய கால்களை கொண்டவராகவும் இருப்பர்.
      12ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் வீண் விரயம் செய்பவராகவும், இழிவான செயல்களை செய்பவராகவும், உடலில் குறையுடன், குறைவான சந்தோசம் கொண்டவராகவும், குடும்பவாழ்வில் சோகம், சோதனை கொண்டவராகவும், சோம்பல்த்தனம் கொண்டவராகவும் இருப்பர்.
       இது மாந்தியின் அமைப்பை பொறுத்து பொதுவான பலன்களே, மற்றபடி மற்ற கிரகங்களின் பார்வை சேர்க்கை பொறுத்து பலன்கள் வேறுபடலாம். ஆனால் இந்த பலன்கள் பெரும்பாலானோருக்கு பொருந்தும்.

Friday, August 19, 2011

வெளிநாட்டு யோகம் சில அமைப்புகள் ஜோதிடக்குறிப்பு



      வெளிநாட்டில் படிப்பத‌ற்காகவும், தொழில் அல்லது வேலை நிமித்தமாகவும், ஊர் சுற்றிப் பார்க்கவும் செல்லுவோர் ஜாதக‌ அமைப்பு பற்றி ஒரு சிறு அலசல்.

1. குரு, சனி, சந்திரன், சுக்கிரன் ஆகியோர் கெடாது, வலுவாக(ஆட்சி, உச்சம், நட்பு, சுபர் பார்வை அல்லது சேர்க்கை) இருக்க வேண்டும்.

2. குரு, சனி( வாயு கிரகங்கள்), சந்திரன், சுக்கிரன்( நீர் கிரகங்கள்) ஆகியோர் கெடாது நீர் ராசிகளில்(கடகம், விருச்சிகம், மீனம்) அமைந்தால் வெளிநாட்டு யோகம் அமையும்.

3. 9, 12க்குடையவர்கள் ஜாதகத்தில் நல்ல விதமாக சம்பந்தப்பட்டால் வெளிநாடு சென்று வரலாம்.

4. ராகு - கேதுக்கள் 3,6,11 ஆமிடங்கள் மற்றும் 5,7,9 ஆமிடங்கள்(3-9,6-12,5-11,1-7 என அமர்ந்திருப்பது) நின்றாலும் வெளிநாட்டு யோகம் அமையும்

லாபதிபதி யார்? ஜோதிடக்குறிப்பு

      சரலக்கினகாரர்களுக்கு(மேஷம், கடகம், துலாம், மகரம்) லாபாதிபதியாகிரவர் பாதகாதிபதியாவதால் நன்மைகளை செய்வதில்லை. பாதகாதிபதி எங்கிருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் பெரும் நன்மைகளை செய்வதில்லை.
      மற்ற லக்கினகாரர்களுக்கு.......
      ரிஷப லக்கினகாரர்களுக்கு லாபாதிபதி குரு அவர் லக்கினாதிபதி சுக்கிரனுக்கு பகை, குருவுக்கு மற்றொரு அதிபத்தியம் 8ம் இடம் ஆதலால் அவருடைய திசா புத்தி காலங்களில் நன்மைகள் கிடைப்பதில்லை.
      மிதுன லக்கினகாரகளுக்கு லாபாதிபதி செவ்வாய் லக்கினாதிபதி புதனுடன் பகை, செவ்வய்க்கு மற்றொரு ஆதிபத்தியம் 6ம் இடம் ஆதலால் நன்மைகள் செவ்வாயும் தனது திசா புத்தி காலங்களில் அளிப்பத்ற்கில்லை.
      சிம்ம லக்கினகாரர்களுக்கு தனலாபாதிபதி புதன் லக்கினாதிபதி சூரியனுடன் நட்பு அதலால் மற்ற லக்கினகாரர்களை விட இந்த லக்கினத்திற்க்கு மட்டும் பலன் பரவாயில்லாமல் இருக்கும்.
      கன்னியா லக்கினகாரர்களுக்கு லாபாதிபதி சந்திரன் இவரும் அமர்ந்த இடத்தைப்பொறுத்து சாமன்ய பலன்களை அளிப்பார். ஆனாலும் லக்கினதிபதியுடன் அவ்வளவாக சுமூகமான உறவு இல்லை என்பதால் பரவாயிலாமல் பலன்கள் கிடைக்கும்.
      அதே போல் துலாலக்கினகாரர்களுக்கும் ஒரே அத்பத்தியம் உள்ள சூரியன் லாபாதிபதியானாலும், லாபதிபதியே பாதகாதிபயாவதாலும், லக்கினாதிபதி சுக்கிரனுக்கு சூரியன் நல்லவனல்ல என்பதாலும் பெரும்பாலும் துலாலக்கின காரர்களுக்கு சூரியனின் காரகங்கள் கிடைப்பதில்லை. மூத்த சகோதரர்கள் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் அவர்களால் குடும்பத்திற்க்கு பிரயோஜனம் இருக்காது. த‌ந்தை மகனின் பாசங்கள் காரணத்திற்க்கு உட்பட்டே இருக்கும், காரணம் முடிந்தவுடன் பாசமிருக்காது. ஆதலால் இவர்களுக்கு சூரியன் நன்மையை செய்வான் என்று நம்புவதற்கில்லை.
      விருச்சிக லக்கினகாரர்களுக்கு புதன் அஷ்டமலாபாதிபதியாகிரார். லக்கினாதிபதி செவ்வாயுடன் பகை ஆத்லால் இவர்களுக்கும் லாபாதிபதியால் நன்மையில்லை.
      த‌னுசு லக்கினகாரர்களுக்கும் லாபதிபதி சுக்கிரன் ஆறாம் ஆதிபத்தியம் வருவதாலும், லக்கினாதிபதியுடன் சுமூகமான நிலையில்லாததாலும் சுக்கிரன் தனது திசா புத்திகாலங்களில் நன்மைகள் செய்வார் என்பத‌ற்கில்லை.
      கும்ப லக்கினகாரர்களுக்கு தனலாபாதிபதி குரு லக்கினாதிபதி சனியுடன்  பெருத்த பகையில்லை, ஆகையால் பரவயில்லாத் பலன்களை அளிப்பார்.
      மீன லக்கினகாரர்களுக்கு லாபாதிபதி சனி விரயாதிபதியும் ஆவதால் லாபம் நிஷ்பலம் ஆகும். ஆனால் பயப்படுவதிற்க்கு ஒன்றும் இல்லை.
      மொத்தத்தில் லாபாதிபதியால் எந்த லாபமும் இல்லை. எதனால் என்றால்...
லக்கினத்திக்கு மூன்றுக்குடையவன் ஒரு பாபி,

லக்கினத்திற்க்கு ஆறாமிடத்திர்குறியவன் மூன்றாம் இடத்ததிபனை விட பாபி,

ஆறுக்கு ஆறாம் இடத்ததிபன் 11ம் இடத்திற்குறியவன் இவர்கள் இருவரையும் விட பாபி.

ஆதலால் 11ம் இடத்ததிபனை லாபாதிபன் என்று எப்படி சொல்லுவது?

Thursday, August 11, 2011

சுயமுன்னேற்றம் ஜோதிக்குறிப்பு

      சந்திரனுக்கு இரண்டில், சூரியன், ராகு, கேது தவிர மற்ற கிரகங்கள் நிற்பது சுனபா யோகமாகும் பதவி, புகழ் அந்தஸ்த்து அனைத்தும் கிடைக்கும். அதிலும் குரு நிற்பது விசேஷ‌ சுனபா யோகமாகும். ஜாதகர் தனது சுய முயற்சியினால் பதவி தனலாபம் அடைவார்.

Tuesday, August 9, 2011

தலைக்கன‌ம் ஜோதிடக்குறிப்பு

      ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் குரு சேர்க்கையால் ஏற்படும் யோகத்திற்க்கு பெயர் குருமங்கள யோகம். இந்த யோகம் உடையவர்களுக்கு பதவி, புகழ்,பெரும் செல்வம் கிடைக்கும். ஆனால் இவர்களிடம் மிகுந்த கர்வம் மற்றும் பிறரை மதியாமை போன்ற‌ குணங்கள் இருக்கும்

Sunday, August 7, 2011

குறைகூறும் மனைவி யாருக்கு? ஜோதிடக்குறிப்பு


      ஆண்களின் ஜாதகத்தில் 7ம் இடத்ததிபன் மிதுனம்/கன்னியில் கெட்டு நிற்க அல்லது 7 அதிபன் புதனாக இருந்து பகை நீசம் பெற்றோ அல்லது பாவிகளுடன் இனைந்தோ கெட்டு நின்றால்,
      அவர்களுக்கு வாய்த்த மனைவி வாயாடிகளாகவும், வெட்டிப் பேச்சு பேசுபவர்களாகவும், கணவன் ஒன்றுக்கும் உதவாதவன் என்று சொல்லிக்கொண்டு கண‌வனை வார்த்தைகளால் வறுத்து எடுத்துக்கொண்டு உட்கார்ந்து தின்று கொண்டு இருக்கிறவர்களாகவும்.
       எனக்கு வீட்டு வேலையே சரியாக இருக்கிறது, நான் ஏன் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாகவும். அந்த வீட்டு வேலையையும் சரிவர செய்யாமல் பேச்சு செயல் அனைத்திலும் பதட்டம் கொண்டு செயல் படுபவர்களாகவும் இருக்கின்றனர். எனக்கு சந்தோசம் இல்லை நீயும் சந்தோசமாக இருக்ககூடாது என்று செயல்படுபவர்களாக இருக்கின்றனர்.
      இவர்கள் முழுக்க முழுக்க கணவனை குறைகூறிக்கொண்டு இருந்தாலும், இவர்களை சமூகம் மற்றும் குழந்தைகள் நலன் கருதி இந்த ஜாதகர்கள் சகித்துக் கொண்டு வாழ்பவர்களாக இருப்பதைப்பார்க்க முடிகிறது. இந்த ஜாதகர்களின் வாழ்க்கை தாமரை இலை தண்ணிர் போல் அமையும் வாழ்க்கை என்று குறிப்பிடலாம் அல்லவா?